சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி முன்வைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பதில் நாடாளுமன்ற செயலாளர் பணி இடைநீக்கப்பட்ட விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு சபாநாயகருக்கு எதிராக எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக வெளியாகும் தகவல் தொடர்பில் அமைச்சரிடம் நேற்று கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்குமாறு நாம் எதிரணியிடம் கோருகின்றோம்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிரணியிடம் நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான குழு கூட்டத்தில் வினவப்பட்டது. இதன்போது உரியநேரத்தில் முன்வைக்கப்படும் என்றார்கள், ஆனால் கால எல்லையை குறிப்பிடவில்லை.
கையொப்பம் திரட்டி படம் காட்டுவதுடன் நின்றுவிடாமல் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.” – என்றார் அமைச்சர்.










