ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிப்பது உறுதியான விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களின் கோரிக்கைக்கமையவே இணைந்து செயல்பட இரு கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த இணைவானது அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் எதிரணி பலம் தெரியவரும்.” – எனவும் அவர் மேலும் கூறினார்.
இரு தரப்பு இணைவு தொடர்பில் நீண்டகாலமாக கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்தாலும், இணைவுக்குரிய கால எல்லை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் விரைவில் நடக்குமென தற்போது நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.










