அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் இன்று கருத்துத் தெரிவிக்கையில்,
“கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறும்.
இதில் சகல மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்தப் போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவதோடு எமது பங்களிப்பையும் தொடர்ச்சியாக வழங்குவோம்.” – என்றார்.










