“இன்று முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்”
இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனவரி 29ஆம் திகதி அத்துருகிரிய குணசேகர ஆரம்ப வித்தியாலயத்தில் நடைபெற்ற, புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
“ஒவ்வொரு பிள்ளைக்கும் வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை வழங்குவதற்கான பாரிய பொறுப்பை அரசாங்கம் என்ற வகையில் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.
பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் பாடசாலைக்குச் செல்வதைக் காணும் வகையில், புத்தகப் பையின் சுமையைக் குறைத்து, அழுத்தங்களற்ற கற்றல் சூழலை உருவாக்குவது புதிய கல்வி மறுசீரமைப்பின் ஒரு விசேட அம்சமாகும்.
மனதிற்கு இனிய பாடசாலைச் சூழலை உருவாக்குவதற்கான ‘கனவுப் பாடசாலை’ (Dream School) திட்டத்தை யதார்த்தமாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
இன்று முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்” – எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.










