பொகவந்தலாவை வைத்தியசாலை குறைபாடுகள்: மே 30 ஆம் திகதிக்குள் அறிக்கை கோரல்!

பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்து, எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலயத்திற்கு மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் சுப்பையா கமலதாசன், சுகாதார திணைக்களத்திற்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து, நுவரெலியா பிராந்திய சுகாதார பணிப்பாளர் எதிர்வரும் 30.05.2026 ஆம் திகதிக்கு முன்பதாக உரிய அறிக்கையினை மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் காரியாலயத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles