ஜனாதிபதியின் மே தின உரை குறித்து ஐ.நாவில் முறைப்பாடு: மனோ, ஜீவன் உட்பட 24 எம்.பிக்கள் கையொப்பம்!

மே தின பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான், ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர, உள்ளிட்ட 24 எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் சுதந்திரம் தொடர்பான சிறப்பு அறிக்கையாளருக்கு இந்த முறைப்பாட்டுக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டுக் கடிதத்தில்,

“ 2026 மே 1 திகதி சர்வதேச அனைத்துலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பேரணியின் போது, ​​ஜனாதிபதி, 2026 மே 25 ஆம் திகதிவழங்கப்படவிருக்கும் ஒரு நீதித்துறைத் தீர்ப்பு குறித்துப் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், பொதுமக்கள் அதனை “கைதட்டி வரவேற்க” முடியும் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை, நிலுவையில் உள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்த முன் அறிவு இருப்பது போன்ற தோற்றம், உணரப்பட்ட அல்லது உண்மையான நிர்வாகத் தலையீட்டின் ஆபத்து, நீதித்துறை நடுநிலைமை மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைவு ஆகிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது.

அத்துடன், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், வரவிருக்கும் ஒரு குறிப்பிட்ட முடிவைக் குறிப்பிடும் துல்லியத்தன்மை, என்பன தீர்ப்பில் முறையற்ற செல்வாக்கு செலுத்தப்படலாம் என்ற நியாயமான அச்சத்தை உருவாக்குகின்றன.

இத்தகைய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடும் என்று சிறிலங்கா சட்டவாளர்கள் சங்கம் முறைப்படி கவலை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்பு, நீதித்துறை சுதந்திரத்தை அரசின் அடித்தளக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கிறது.

குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கையின் 14வது பிரிவு, சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற தீர்ப்பாயத்தால் நியாயமான விசாரணை அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது.

நீதித்துறையின் சுதந்திரம் குறித்த ஐ.நா.வின் அடிப்படைக் கோட்பாடுகள் (1985), நீதித்துறை முறையற்ற தலையீடுகளிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும், அரசு அதிகாரிகள் நீதித்துறை சுதந்திரத்தைக் குலைக்கும் செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.

ஜனாதிபதியின் கூற்று, அது உள்நோக்கத்துடன் கூறப்படாவிட்டாலும், ஒரு நேரடித் தலையீடாகவும், அனைத்துலக தரநிலைகளின்படி முறையற்ற செல்வாக்காகவும் அமைகிறது.

நிலுவையில் உள்ள நீதித்துறை நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடிய கருத்துகளை நிர்வாகம் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அனைத்துலக சட்டவியல் மற்றும் ஐ.நா. தரநிலைகள், மறைமுகமான அல்லது அடையாளப்பூர்வமான தலையீடு கூட பொது நம்பிக்கையைக் குலைக்கும் பட்சத்தில் அது ஒரு மீறலாக அமையக்கூடும் என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றன எனவும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles