மழை தொடரும்: மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றைய தினமும் கடும் மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

மலையகத்தில் சில இடங்களில் காலை முதலே மழை பெய்துவருகின்றது.

அதேவேளை, 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல், களுத்துறை, மாத்தளை, மொனறாகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலகளங்களில் உள்ள பகுதிகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles