கொழும்பில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்றுவரை 45 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 227 பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கொரோனா 2ஆவது அலைமூலம் கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 முதல் இன்றுவரை 20 ஆயிரத்து 17 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 10 ஆயிரத்து 303 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 854 தொற்றாளர்களும் , யாழ். மாவட்டத்தில் 241 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் 25 மாவட்டங்களிலும் 2ஆவது அலைமூலம் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 39 ஆயிரத்து 333 பேர் இன்று காலைவரை குணமடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles