மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 62வது ஜனன தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, கொட்டகலை சி.எல்.எப் ஆறுபடை தாயுமான சிவன் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான கொழும்பு சௌமியபவனிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், தலைவிமார்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.










