அரசியல் பிழைப்புக்காகவே எதிரணிகள் பொருளாதார நெருக்கடியென கொக்கரிப்பு!

தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே பொருளாதார நெருக்கடி, ஆட்சி கவிழப்பு என்பன பற்றி எதிரணிகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கம் ஸ்தீரமான நிலையில் உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கோட்டா ஆட்சியின்போது நடந்ததுபோல அரசாங்கம் கவிழும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கூறிவருவது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

“2025 டிசம்பர் மாதம் நாடு வீழ்ச்சியடையும் என எதிரணிகள் கூறின. அதன்பின்னர் மார்ச் மாதம் என பிரச்சாரம் முன்னெடுத்தன. இவ்வாறு மாதங்களைக் கூறிக்கொண்டு எதிரணி உறுப்பினர்கள் அரசியல் நடத்துகின்றனர்.

தமக்கு எஞ்சியுள்ள கட்சி ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்கும், அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவுமே நாடு விழும், அரசு விழும் என்றெல்லாம் கதைகள் கூறப்படுகின்றன.

திருடர்களைப் பிடிப்போம், ஊழல்களை இல்லாமல் ஆக்குவோம் , நிவாரணம் வழங்குவோம் என்றெல்லாம் அவர்களால் கூறமுடியாது. அதனால்தான் பொருளாதார வீழ்ச்சிப் பற்றி மாதங்களைக்கூறி நாட்கள் கடத்தப்படுகின்றது.

இதுதான் அவர்களில் அரசியல், அதற்கு வழிவிடுவோம். அது பற்றி அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை.” – என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles