நாட்டில் கடந்த 7 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 8 ஆயிரத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 07 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 63 ஆயிரத்து 835 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் பதுளை மாவட்டத்தில் 860 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 383 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மாகாணத்தில் டெங்கு நோயால் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே 33 ஆயிரத்து 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த பாதிப்பில் 52.59 சதவீதமாகும்.
142 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு, அதி அபாய டெங்கு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
( நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதேபோல எமது வீடு மற்றும் சூழவுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது எமது பொறுப்பாகும். வரும் முன் காப்போம் என்பதற்கிணங்க, சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தி, டெங்கு நோய் மேலும் பரவாமல் இருப்பதை தடுப்போம்)

