கொவிட் நிவாரணியாக பிரசாரம் செய்யப்பட்ட ஆயுர்வேத பாணி அருந்திய இராஜாங்க அமைச்சருக்கும் கொவிட் தொற்று

இராஜாங்க அமைச்சர் பிரியல் நிசாந்தவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

துரித ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை செய்ததன் மூலம் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமைச்சின் 10 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கேகாலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்ப்டடுள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றுக்கான ஆயுர்வேத நிவாரணியாக தம்மிக்க பண்டார வழங்கிய கொவிட் பாணி நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டபோது, இராஜாங்க அமைச்சர் பிரியால் நிசாந்தவும் இதனை அருந்தியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது அவருக்க கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 224 பேரில் தற்போது நான்காவது நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

 

Related Articles

Latest Articles