லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காக இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லிந்துலை, லிப்பகலை தோட்டத்தைச் சேர்ந்த முத்து நாராயணசாமி (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் ரட்னகரிய தோட்டத்தில், தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இதில் முத்து நாராயணசாமி உயிரிழந்துள்ளார். ஏனையோர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பி.கேதீஸ், கௌசல்யா










