நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 90 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 10 நாட்களில் 5,348 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 48, 033 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய மாகாணத்தில் 8,075 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,458 பேரும், ஊவா மாகாணத்தில் 2,527 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.











