பாதுகாப்பு செயலருடன் இந்திய தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சிற்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவைச் சந்தித்துப் நேற்று பேச்சு நடத்தியுள்ளார்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயண ஒழுங்குகள், மற்றும் இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புகளில் இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், மற்றும் துணைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles