2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கு ஆரம்பிக்கும் போது, கட்டிட வரைபட அனுமதியைப் பெறும் போது, மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பிக்கும் போது TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.











