தோடடதுரைமாரின் அடாவடி உச்சம்: முடிவுக்கு கொண்டுவர மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும்

பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைகள், ஒடுக்குமுறைகள், அழுத்தங்கள் மற்றும் வேலைப்பளுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளரும், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மன உளைச்சலுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பகுதியில் இன்று 03ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சகல தொழிற்சங்கங்களும் இன,மத மற்றும் கட்சி பேதங்களை கடந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், குறித்த நாட்களில் பணியாற்ற வேண்டுமாயின் கைகாசு அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் தொழிலாளர்களுக்காக செலுத்தப்பட வேண்டிய நுPகு மற்றும் நுவுகு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகள் மற்றும் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 200 ரூபாய் கொடுப்பனவு ஆகியவற்றைத் தவிர்க்கும் நிலை ஏற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், பல தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் காடுகளாக மாறியுள்ள நிலையில்இ புலிஇ சிறுத்தை மற்றும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.

அதேவேளை, தோட்டப் பகுதிகள் தனியாருக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதன் மூலம் தோட்டங்கள் துண்டாடப்பட்டுஇ தொழிலாளர்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறான பிரச்சினைகள் ஒரு சில தோட்டங்களில் மாத்திரமன்றிஇ பல தோட்டங்களில் பரவலாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவேஇ தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும்இ அரசாங்கம் தொழிலாளர் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் புஸ்பா விஸ்வநாதன் வலியுறுத்தினார்.

மேலும்இ இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவொரு தொழிற்சங்கமாவது முன்வந்து போராட்டத்தை முன்னெடுத்தால்இ தமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles