மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் விஜயதசமி பூஜை காலப்பகுதியில் வீதிகளின் இருமருங்கிலும் ஆவாரம் பூக்கள் பூத்துக் குலுங்கும் காட்சி அப்பகுதிகளுக்குத் தனித்துவமான அழகைச் சேர்த்துக் காட்டுகிறது.
குறிப்பாக நுவரெலியா நானுஓயா பகுதியிலும் ஏராளமான இடங்களில் நீண்ட வாரிசையில் மருத்துவ குணம் கொண்ட அற்புத மூலிகையான ஆவாரம் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக, விஜயதசமி பூஜை வழிபாட்டு நடவடிக்கைகளின் போதும் இப்பூக்களை அலங்காரப் பணிகளுக்காகவும் வழிபாடுகளுக்காகவும் மக்கள் வடிவமைத்துப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
அத்துடன் தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் போது ஊர் திருவிழாவின் போது காப்பு கட்டுவதற்கும் வீட்டு வாசலிலும் இப்பூக்களை தோரணமாக தொங்கவிடுவர்.
பொன் மஞ்சள் நிறத்தில் தரிசு நிலங்களிலும், வறட்சியான காலங்களில் கூட தன்னிச்சையாக வளர்ந்து பூத்துக் காய்த்து தொங்கும் இந்த செடிக்கு மருத்துவ குணங்கள் அதிகம்.
மலையகதில் பிரதான சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் ஆவாரம் பூக்கள் பூத்து குலுங்குவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை செழித்து குவியலாக வளர்ந்துள்ள ஆவாரம் பூக்கள் கவர்ந்துள்ளது.










