மஹிந்தவுக்கு தொடர்ந்து சிகிச்சை

“மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் தங்கி இருந்து தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.”- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார்.

இருதய நோய் தீவிரமடைந்தாலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது
என்றெல்லாம் தகவல் வெளியானது. மறுபுறத்தில் வழமையான மருத்துவ பரிசோதனைக்காகவே மஹிந்த சென்றார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மஹிந்தவின் உடல் நிலை பற்றி கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த முன்னாள் எம்.பி., சஞ்ஜீவ எதிரிமான்ன,
“ நபரொருவரின் உடல்நிலை, சுகாதார நிலை பற்றி வைத்தியர்களுக்கே கருத்து கூறும் உரிமை உள்ளது. எனவே, மஹிந்த சிகிச்சைப் பெற்றுவருகின்றார் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும். அவரின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை நாம் மதிக்க வேண்டும்.”- என்றார்.

Related Articles

Latest Articles