ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்: நகர அபிவிருத்திக்கு வர்த்தகர்கள் வரவேற்பு

ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் இன்று (20) இடித்து அகற்றப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி நடவடிக்கைக்கு வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் வருமான நிர்வாகி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால், பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த அனுமதியற்ற கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டன.

தற்போதைய அரசாங்கத்தின் ‘வாழும் நகரம்’ (Living City) திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, முறையற்ற வகையில் அமைந்துள்ள ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கு நகரசபை நிர்வாகம் தீர்மானித்துள்ளதுடன், 19ஆம் திகதி முதல் அந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வந்தது.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர், அனுமதியற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கும் தேவையான வசதிகளுடன் தனியான இடமொன்றை அமைத்துக் கொடுக்க நகரசபை கவனம் செலுத்தியுள்ளது. இதன்மூலம், நுகர்வோர் இலகுவாக நடமாடக்கூடிய வகையில் சந்தை வளாகத்தை ஒழுங்கமைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

ஹட்டன் நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம் தமது வியாபார நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என பொதுச் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles