அகற்றப்பட்ட வியாபாரிகளுக்கு புதிய இடம் வழங்கப்படும்: ஹட்டன் நகரசபைத் தலைவர் உறுதி

ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஹட்டன் பொதுச் சந்தை வளாகத்தில் அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றப்பட்டமை சட்டபூர்வமான நடவடிக்கை என ஹட்டன் – டிக்கோயா நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் இன்று(20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஹட்டன் நகரை ‘வாழும் நகரம்’ (Living City) திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகரசபை உறுப்பினர்களின் அனுமதியுடன் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும், அந்தத் தீர்மானம் தொடர்பில் அனுமதியற்ற நடைபாதை வியாபாரிகளுக்கு எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் அறிவிக்கப்பட்டு, வெளியேறுவதற்கு நீண்டகால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும், குறித்த வியாபாரிகள் வெளியேறாத நிலையில், கடந்த 19ஆம் திகதி அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட நகரசபைத் தலைவர், அனுமதியற்ற வியாபாரங்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து இதுவரை நகரசபைக்கு எவ்வித வருமானமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இருப்பினும், ஹட்டன் பொதுச் சந்தை வளாகம் மற்றும் சக்தி மண்டபத்திற்கு அருகிலுள்ள அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பின்னர், குறித்த வியாபாரிகளுக்கு சட்டபூர்வமாக வியாபாரம் செய்வதற்கான இடமொன்று வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், தாம் வியாபாரம் நடத்தும் இடத்தில் எவ்வித அனுமதியற்ற கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், சட்டபூர்வமாகப் பெற்றுக்கொண்ட கட்டிடத்திலேயே தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் நகரசபைத் தலைவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஹட்டன் – டிக்கோயா நகரசபை செயலாளர் ஷாலமலி ரூபசிங்க மற்றும் வருமான நிர்வாகி உபுல் பிரியந்த கமகே ஆகியோர், நகரசபையின் ஆளும் தரப்பினால் எடுக்கப்படும் சட்டபூர்வமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளதாக தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles