நுவரெலியா போடைஸ் பகுதியைச் சேர்ந்த தம்பிராஜா சியாம் பிரபாகர், இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையில் (STF) இணைந்துள்ளார்.
இலங்கையின் முக்கிய பாதுகாப்புப் பிரிவுகளில் ஒன்றான பொலிஸ் விசேட அதிரடிப்படையில் ஒரு வருட காலப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அவர், தனது நியமனத்தைப் பெற்றுள்ளார்.
கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் சியாம் பிரபாகர், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விளையாட்டுத் துறையிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளார்.
அவரது இந்த வெற்றிப் பயணம் மேலும் சிறப்பாக அமைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
