முதலாளிமார் சம்மேளனத்தின் திட்டத்துக்கு தொழில் அமைச்சு பச்சைக்கொடி

தமது தரப்பால் முன்வைக்கப்பட்ட உற்பத்தித் திறன் ஊதியத் திட்டத்திற்கு தொழில் அமைச்சு பச்சைக்கொடி காட்டியுள்ளது என்று  பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,

“தொழில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) நாள் ஒன்றுக்கு ரூபா. 1,108 வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்குவதற்கான திருத்தப்பட்ட ஊதிய முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

திருத்தப்பட்ட முன்மொழிவானது தொழில் அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட தீர்வின் விளைவாகும். எனினும், தொழிற்சங்கங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்மானம் தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான 1000 ரூபாவை விட அதிகமாக வருவாயைப் பெற்றுக் கொள்ளக் கூடியதை உறுதி செய்வதுடன், மேலும் இறுதியாக உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வெகுமதியையும் அளிக்கும்.

1,108 ரூபா நாள் சம்பளம் பின்வரும் முறைமையின் அடிப்படையாகக் கொண்டது:

அடிப்படை சம்பளம் 725 ரூபா, விலை பங்கு துணை 50 ரூபா, ஊழியர் சேமலாப நிதி / ஊழியர் நம்பிக்கை நிதி (EPF/ETF)) 108 ரூபா மற்றும் வருகை மற்றும் உற்பத்தித் திறன் ஊக்குவிப்புத் தொகை 225 ரூபாவும் இந்த புதிய ஊதிய முன்மொழிவு யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒரு நிலையான தினசரி ஊதிய மாதிரியானது வாரத்தில் 3 நாட்களுக்கு பொருந்தும். மீதமுள்ள நாட்களில் உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட்ட இரண்டு வருவாயை அதிகரிக்கும் மாதிரிகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்கள் ஊதியம் பெறுவார்கள் – அதில் ஒன்று பறிக்கப்பட்ட ஒவ்வொரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கும் ஊழியர்களுக்கு 50 ரூபா வழங்கப்படும். இரண்டாவது வருவாய் பங்குமாதிரி, இதன் மூலம் ஊழியர்கள் தொழில் முனைவோராக முடியும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை பெருந்தோட்ட துரைமார் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம்,  “தொழிற்சங்கங்கள் மணலில் ஒரு கோடு வரைந்து அதில் அவர்கள் கூறுவது, எமது தொழிலாளர்களுக்கு சிறந்தது என்னவென்றால், எந்தவொரு ஊக்கத் தொகையும் இல்லாமல் 1000 ரூபா
அடிப்படை சம்பளம், தவறாமல் வேலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இந்த செயல்பாட்டில் பல சலுகைகளை அவர்கள் நிராகரித்தனர்.

இவை ஒவ்வொன்றும் ஒரு நிலையான தினசரி ஊதியத்தை 1000 ரூபாவுக்கு மேல் வழங்குகின்றது. இந்த திட்டத்தை அரசியல் நலனுக்கு அப்பாற்பட்ட தோட்டத் தொழிலாளியின் சிறந்த நலனுக்காக பரிசீலிக்கும்படி தொழிற்சங்கங்களை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

“உற்பத்தித் திறன் மாதிரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், தொழிலாளர்களுக்கு நெகிழ்வான நேரங்கள்மற்றும் மேம்பட்ட தொழிலாளர் ஆகியவை பிற குடும்ப உறுப்பினர்கள் சம்பாதிக்கும் செயன்முறையிலும் பங்களிக்க முடியும். எமது தொழிலாளர்கள் எப்போது, எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் பற்றிச்சொல்வார்கள், மேலும் செயற்பாட்டில் அவர்களின் வருவாயை துரிதமாக மேம்படுத்துவார்கள்.” என தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles