விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு விரைவில் புதிய சட்டம்

இலங்கையில் விளையாட்டுத்துறையை நவீனமயப்படுத்தும் – மேம்படுத்தும் நோக்கில் புதிய சட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதனை நடைமுறைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

” நான் அமைச்சராகி ஐந்து மாதங்கள்தான் ஆகின்றன. கிரிக்கெட் விளையாட்டு வீழ்ச்சியடைய ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. எவ்வாறாயினும் இறந்தகாலத்தில் நடந்தவை பற்றி பேசி அர்த்தமில்லை. எதிர்காலத்தில் சிறந்த வேலைத்திட்டத்துடன், நாம் பயணிக்க வேண்டும். கிரிக்கெட் கட்டுபாட்டு சபையில் அரசியல்வாதிகளுக்கு கையளிக்க முடியாது. ஐசிசியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் அது இயங்குகிறது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் சில குழுகள் உள்ளதாகவும் ஏகாதிபத்திய முறைமை காணப்படுவதாகவும் கூறுப்படும் குற்றச்சாட்டுகள் கிரிக்கெட்டுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அனைத்து விளையாட்டுகளிலும் இவ்வாறுதான் காணப்படுகிறது. இதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அதாவது பழைய விளையாட்டு சட்டத்திற்கு பதிலாக புதிய விளையாட்டு சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். எமது அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் தலைமைத்துவத்தின் கீழ் குழுவொன்றை அமைத்துள்ளேன். குறித்த குழுவின் ஊடாக புதிய சட்டம் தயாரிப்புக்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதுடன், சட்ட மாஅதிபர் திணைக்களத்துடன், கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. இதுதொடர்பில் அனைவருக்கும் கருத்துகளை முன்வைக்க முடியும்.

விளையாட்டு என்பது ஒரு காரணி என்பதுடன், நிர்வாகமென்பது மற்றுமொரு காரணியாகும். இரண்டையும் சிக்கலாக்கிக்கொள்ள கூடாது. முன்னாள் வீரர் அரந்த டி சில்வா குழு தலைமையில் கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக கிரிக்கெட் விளையாட்டு அபிவிருத்தி செய்யப்படும். 17 வயத்திலிருந்து நாம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும். இன்று நாளை இதற்கான பிரதிபலன் கிடைக்மென நாம் எதிர்பார்க்க வில்லை. ஆகவே, கிரிக்கெட் விளையாட்டை அரசியல் மயப்படுத்த வேண்டாமென எதிர்தரப்பினரிடம் கேட்கிறோம் என்றார்.

Related Articles

Latest Articles