மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரனான பொலார்ட், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டியுள்ளார்.
இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் ஓவருக்கே, இவ்வாறு சிக்ஸர் மழை பொழிந்தார் பொலார்ட். இதனால் மே. தீவுகள் அணி இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.
5ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பொலார்ட், 11 பந்துகளில் 38 ஓட்டங்களைக் குவித்தார்.
அதேவேளை, இப்போட்டியில் மூன்றாவது ஓவரை வீசிய அகில தனஞ்ச, ஹட்ரிக் சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிறிஸ் கெயில் உட்பட மூவரின் விக்கெட்டுகளையே வீழ்த்தினார்.