விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஓல்ட்டன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒல்ட்டன் தோட்ட நிர்வாகத்துக்கும், தொழிலாளர்ளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து தோட்ட நிர்வாகம், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் 26 தொழிலாளர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி முறைப்பாட்டிற்கமைய 10 பேரை பொலிஸார் கைது செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை சந்தேக நபர்களை மார்ச் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். ஏனைய 16 பேருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேரும் 15 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கான பிணையை இ.தொ.காவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வழங்கினர் என அக்கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 16 பேரில் 12 பேர் இன்று ஆஜராகியிருந்தனர். அவர்களும் பிணை வழங்கப்பட்டுள்ளது.