ஒவ்வொரு குழந்தையும் முதல் ஒரு ஆண்டிற்குள் சரியான எடையை எட்ட வேண்டும் என்பது அவசியம்.
அந்தவகையில் எப்படி குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பது என பார்க்கலாம்.
- குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுப்பது மிக மிக முக்கியம். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- 6 மாதம் தொடங்கிய பின்னரே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழைப்பழத்தை தவிர்க்கலாம். மற்ற அனைத்து வாழைப்பழங்களும் குழந்தைக்கு நல்லது. 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நீங்கள் கேக்காகவோ, புட்டிங்காகவோ செய்து தரலாம்.
- குழந்தைக்கு கேரளா நேந்திர பழ கஞ்சி குழந்தைகளுக்கான மிகசிறந்த உணவு.
- 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, நெய் சேர்த்த உணவுகளைக் கொடுக்கலாம். கிச்சடி உணவுகளை நெய் சேர்த்துக் கொடுப்பது நல்லது. பொங்கல், உப்புமா போன்றவற்றில் நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம். பருப்பு சாதம், சப்பாத்தி, பராத்தா போன்றவற்றிலும் நெய் சேர்க்கலாம்.
- வேகவைத்துத் தோல் உரித்து, நன்கு மசித்து குழந்தைக்கு கொடுக்க மிக சிறந்த உணவு இது. நொறுக்கு தீனியாக, ஃபிங்கர் ஃபுட்டாக, ப்யூரியாக, கட்லெட் போல உருளைக்கிழங்கை குழந்தைகள் உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பருப்புகளை வேகவைத்துத் தரலாம். பாசி பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை குழந்தைக்கு நல்லது. பருப்பு வேகவைத்த தண்ணீரை குழந்தையின் முதல் உணவாகவே தரலாம்.
- நட்ஸை அரைத்துக் கொடுக்கலாம். அதாவது பொடி செய்து பவுடராக சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஜூஸ், ஸ்மூத்தி, ப்யூரி, கேக், பான்கேக் போன்றவற்றில் நட்ஸ் பவுடர் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம்.