அடை மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபம் சேதமடைந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையில், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்தில் காணப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அறிவித்து, தேவையான முன்னேற்பாடுகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வனர்த்தம் தொடர்பில் இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமானசெந்தில் தொண்டமானுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.










