பாடசாலை மாணவர்களுக்கான பிரஜா வித்தியா கல்வித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
கொவிட் 19 பாதிப்பின் காரணமாக மாணவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சவால்களை எத்ரிக்கொள்ளும் நிலையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் எண்ண கருவிற்கமைய பிரஜாசக்தி செயல்திட்டத்தின் ஊடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் விளக்கமளித்துள்ள பாரத் அருள்சாமி,
இந்த விசேட திட்டத்தின் ஊடாக பல பாடநெறிகள் ‘இலவசமாக’ பிரஜாசக்தி பேஸ்புக் தளத்தின் ஊடாக நேரடியாக தினமும் பதிவேற்றப்படும்.
மாணவர்களின் கல்வியை இலகுவாக்குதே எமது நோக்கம். இப்பாடநெறிகள் திறமையான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், வளவாளர்கள், பல்கலைகழக மாணவர்கள் என பலரால் வழங்கப்பட உள்ளது.
கற்பித்தலில் ஆர்வமுள்ளோரும் எம்முடன் இணைந்துக்கொள்ளலாம். நேரடியாக மாணவர்கள் தமக்கு தேவையான கேள்விகளையும் ஆசிரியர்களிடம் கேட்டு,சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும்.
இதற்காக மென்பொருள் ஒன்றின் ஊடக இன்னும் சிறப்பாக நாம் இச்சேவையை வழங்க உள்ளோம்.
அத்துடன், யூ டியூப் தளத்தில் இக்காணொளிகள் பதிவேற்றப்படும். புலமை பரிசில் பரீட்சை சாதாரணதரம் மற்றும் உயர் தரம் ஆகிய பாடத்திட்டங்களில் நாம் விசேட கவனம் செலுத்தி உள்ளோம்.
மேலும் பல பாட நெறிகளை நாம் வழங்க உள்ளோம். ஒரு சமூகமாக “கல்வியால் உயர்வடைவோம்”. என்று பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/prajashakthi.official மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.