நாவலப்பிட்டிய, மாத்தளை மாவட்ட வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின்கீழ்!

மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் தெரிவுசெய்யப்பட்ட 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டிய, அவிசாவளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகளே சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

இது தொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு,

இலங்கையில் தேசிய மருத்துவமனைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனை ஒன்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுவதும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளின் சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும்

இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, அந்நோக்கத்தை அடைவதற்காக குறித்த மாவட்ட பொது மருத்துவமனைகளை சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles