‘ஒலிம்பிக்கில் பங்கேற்க ஜப்பான் சென்றவருக்கு கொரோனா’

ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா நாட்டு அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம்   23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட்  8 ஆம் திகதிவரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இப்போதே ஒவ்வொரு அணிகளாக ஜப்பான் செல்ல தொடங்கி விட்டன.

ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.

ஜப்பான் கிளம்புவதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவே வந்துள்ளது.

தொற்றுக்குள்ளான நபரை தவிர மற்றவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles