டெஸ்ட் போட்டிகளில் 10 ஆண்டுகள் நீடித்து நிலைத்த கோஹ்லி கடந்து வந்த பாதை

இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி ஐசிசி ​​டெஸ்ட் தரவரிசையில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.

விராட்-கோஹ்லி 2011, ஜூன் 20 ஆம் திகதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சபினா பார்க் கிரிக்கெட் மைானத்தில் முதல் முறையாக களமிறங்கினார். அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 15 ஓட்டங்களையும் பெற்றார்.

தற்போது நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-வது நாளில் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளில் விராட்-கோஹ்லி கடந்து வந்த பாதை:

92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி 61 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

மொத்தம் 7,534 ரன்களை குவித்துள்ளார். அவரது ஆவரேஜ் 52.31 ஆக இருக்கிறது.

2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது டெஸ்டில் முதல் அரை சதம் அடித்தார்.

2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

இந்த 10 ஆண்டுகளில் 27 சதங்களை விளாசியுள்ளார். அதில் 14 சதங்கள் இந்தியாவுக்கு வெளியே அடித்தவை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை இரட்டை சதங்களும், 25 அரை சதங்களும் விளாசியுள்ளார்.

2019-ம் ஆண்டில் புனேவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 254 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்சமாகும்.

2016-ம் ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் 1,215 ரன்களை குவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் இந்திய அணியில் அதிகபட்ச ஆவரேஜ் வைத்திருக்கும் பேட்ஸ்மேன் இவர் மட்டுமே.

2018-ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரர் விருதையும் பெற்றார்.

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக 2017, 2018, 2019 என தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக 2020-ம் ஆண்டு ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு “சர் கேரிபீல்டு சோபர்ஸ்” விருது வழங்கி கௌரவித்தது ஐசிசி.

Related Articles

Latest Articles