இலங்கை மெய்வல்லுனர் உலகத்தில் மறக்கமுடியாத வெற்றி வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க பற்றி யாரும் மறந்திருக்கமுடியாது. 2006 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு 200 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றவர். அதன் பிறகு, எண்ணுக்கணக்கற்ற சர்ச்சைகளில் சிக்கியவர். 2010 ஆம் ஆண்டு கேகாலை மாவட்ட நாடாளுமன்ற ஆசனத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு தோல்வியையும் தழுவிக்கொண்டார்.
தற்போது, சுசந்திகா ஜெயசிங்கவின் மருமகள் மெதானி ஜெயமன்னே களத்துக்கு வந்திருக்கிறார். தனது மாமியாரைப்போல அதி வேக ஓட்ட வீராங்கனையாக இலங்கையிலும் வெளியிலும் சென்று கலக்குகிறார். இப்போது 19 வயது மட்டுமே அடைந்துள்ள மெதானி, இலங்கை மெய்வல்லுனர் குழுவின் குறைந்த வயதுடைய பெண்ணாக சாதனைகளை குவிக்கிறார்.
அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற உலகளாவிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிக்கான தகுதிகாண் ஓட்டத்தில் கலந்துகொண்டு 200 மீற்றர்களை 23.08 நிமிடங்களில் ஓடி வெள்ளிப்பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது மாமியார் 2006 இல் 200 மீற்றர்களை ஒலிம்பிக்கில் 22.28 நிமிடங்களில் ஓடி சிட்னியில் வெள்ளிப்பதக்கம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
