இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று மாலை ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3-0 என்ற அடிப்படையில் ரி -20 தொடரை இழந்தது. அதுமட்டுமல்ல முதலாவது ஒரு நாள் போட்டியிலும் மண்கவ்வியது.
இந்நிலையில் இலங்கை அணி வீரர்கள் மூவர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கடும் சர்ச்சை எழுந்தது. இதனால் இலங்கை அணிமீது கடும் விமர்சனங்கள் முன்வவ்ககப்பட்டுவருகின்றன.
எனவே, இன்றைய போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலளிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட அணி இரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.










