இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.
தனஞ்ஜய டி சில்வா 91 ஓட்டங்களை பெற்றார். கன்னி சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை தவறவிட்டார்.
242 என்ற வெற்றியிலக்கை நோக்கு ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 43 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கை அடைந்தது , 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது போட்டி ஜுலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.










