இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனினும் 2-0 என்ற அடிப்படையில் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இலங்கை அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை 41.1 ஓவர்களில் 166 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் டாம் கர்ரன் 4 விக்கெட்டும், வோக்ஸ், வில்லே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அப்போது பெய்த மழை ஆட்டம் முடியும் வரை தொடர்ந்தது. இதனால் ஆட்டம் பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது. தொடர் நாயகன் விருது டேவிட் வில்லேவுக்கு அளிக்கப்பட்டது.
ஏற்கனவே, டி20 தொடரை 3-0 என இலங்கை அணி இழந்தது.










