இலங்கையில் இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிரிமியர் லீக்கின் 2ஆவது தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெறும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
