இரத்தினபுரி − இறக்குவானை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் எடையுடைய நீல நிற இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது.
இவ்வாறு கிடைத்த இரத்தினக்கல்லை, சீனாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஏல விற்பனையில் விற்பனை செய்வதற்காக, உரிமையாளர் குறித்த கல்லை, தேசிய இரத்தினக்கல் அதிகார சபையிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த கல் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது என உரிமையாளர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து 510 கிலோகிராம் எடையுடைய இரத்தினக்கல் கொத்தொன்று ஒன்று கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் கிடைத்திருந்தது. இது உலகிலேயே மிக பெரிய கல் என கூறப்படுகின்ற நிலையில், அதன் பெறுமதி 100 மில்லியன் அமெரிக்க டொலர் என கணிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பாதுகாப்பு கருதி இரகசியமாக பேணப்படுகிறது.
இக்கல்லை பட்டைத்தீட்டுவதற்கு ஒரு வருட காலத்துக்கும் அதிகமான காலம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. பட்டைத் தீட்டப்பட்டதன் பின்னர் அதன் சந்தைப் பெறுமதி 500 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.