சிறுவர்களைப் பாதுகாக்க விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் குறித்த தகவல்களை அறிவிக்க இரண்டு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
பிரஜாஷக்தி செயல் திட்டத்தின் சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு ஸ்தாபிக்க பட்டுள்ளது. இதன் மூலம் ஆலோசனைகள் வழங்குவது மாத்திரம் அன்றி தரவுகள் திரட்டும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்துள்ளதாக பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
0512222422 மற்றும் 0715550666 இலக்கங்கள் மூலம் தகவல்களைத் பெறவும், தகவல்களை வழங்கவும் முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் வருடாந்தம் சுமார் 900 மாணவர்கள் பாடசாலைகளை விட்டு இடை விலகும் நிலை இருக்கிறது. இவர்களை அடையாளம் கண்டு அவர்களை மீண்டும் கல்வியைத் தொடரவைப்பதற்கு திட்டமொன்றும் வகுக்கப்பட்டுள்ளது.
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஊடாக இலவசமாக தொழில்முறை கல்விஇ இனைய வழி கல்வி போன்ற கல்வி முறை மாத்திரம் அன்றி சுயதொழில் ஊக்குவித்தல் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்ற செயல் முறைகளையும் வழங்கி வருகிறோம்.
மேலும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் வீட்டுவேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள் தொடர்பாக விசேட சட்ட மூலத்தையும் உருவாக்க பரித்துரைத்துள்ளோம் உதாரணமாக ஐடுழு ஊ 189 போன்ற மூலத்தின் மூலம் சட்டங்களை விரிவாக்கல் போன்ற செயன்முறைகளை நாம் முன்னெடுக்க உள்ளோம்.” என்று பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.