கே.சுந்தரலிங்கம்
நோட்டன் பொலிஸ் பிரிவக்குட்பட்ட நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (12) காலை 9.30 மணியளவில் தியகல நோட்டன் பிரதான வீதியில் நோட்டன் நகரத்திற்கு சமீபமாக இடம்பெற்றுள்ளது. மண்சரிவு ஏற்படும் போது கடையில் இருந்த நபர் வெளியில் சென்றுள்ளதனால் அவர் மயிரிழையில் உயிர்த்தப்பியுள்ளார்.
இந்த மண்சரிவு காரணமாக கடையில் இருந்து தளபாடங்கள் குளிர்சாதன பெட்டி உட்பட அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன.
இதே வேளை நோட்டன் தியகல பிரதான வீதியில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
இதனால் இந்த வீதியில் பல இடங்களில் ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றன.
நோட்டன் பகுதிக்கு தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் தியகல நோட்டன் ஊடான பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன
இதனால் இந்த வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதான வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.