தனியார் பத்திரிகையின் ஆசிரியர் வீட்டுக்குள் சிஜடியினர் எனக்கூறும் இருவர் இரவு 2.30 இற்கு உள்நுழைய முற்பட்டமைக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!
தனியார் பத்திரிகையின் ஆசிரியர் வீடு அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புக்குள் சிஜடியனர் எனக்கூறி இருவர் இரவு 2.30 இற்கு நுழைய முற்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக இயங்கவும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்காகவும் தாம் எப்போதும் எவருக்கும் அஞ்சாது குரல்கொடுபேன் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தனியார் பத்திரிகையின் ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் வீடு அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புக்குள் சிஜடியினர் எனக்கூறி இருவர் நேற்று இரவு 2.30 மணியளவில் உள்நுழைய முற்பட்டுள்ளனர். என்றாலும், தொடர்மாடி குடியிருப்பின் பாதுகாவலர் இருவரையும் உள்நுழைய அனுமதியளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து உடனடியாக தனியார் பத்திரிகையின் ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
ஊடகச்சுந்திரம் மற்றும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை முன்னெப்பதற்காக தாம் குரல்கொடுத்து வந்துள்ளதுடன், ஊடகவியலாளர்களின் சேவையானது நாட்டுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஆகவே, இந்தச் சவம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும்,
ஒரு ஊடகவியலாலாரிடம் முறைப்பாடு தொடர்பான ஆதாரங்கள் பெற்றுக்கொள்வதற்கென பொதுவான நடைமுறையொன்று உள்ளது.
ஊடகவியலாளர் ஒருவரிடம் முறைப்பாடு தொடர்பான ஆதாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டிமெனில் முதலில் அவர் பணியாற்றும் ஊடக நிறுவனத்திற்கு எழுத்து மூலமான அறிவித்தல் விடுக்க வேண்டும்.
அதன் பின்னரே உரிய நடைமுறைகளின் ஊடாக ஆதாரங்களை பெற்றுக் கொள்ள முடியும் .உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஊடக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு எப்போதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.