முழு நாட்டையும் இரு வாரங்களுக்கு தற்காலிகமாக முடக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
கொவிட் – 19 சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தகவல்களை மேற்கொள்காட்டி கருத்துகளையும் வெளியிட்டார்.
இவ்வாறு நாட்டை இரு வாரங்கள் முடக்குவதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 1000 ஆக குறைக்க முடியும் எனவும், மரண எண்ணிக்கையையும் 25வரை மட்டுப்படுத்தலாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாளாந்தம் 6000 பேருக்கு தொற்று ஏற்படும் எனவும், நாளாந்த மரண எண்ணிக்கை 220 வரை உயரக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.
