கட்டுநாயக்க – கிம்புலபிட்டி பகுதியில் வசிக்கும் 38 வயதான சீன பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தப் பெண் கடந்த இரண்டு வருட காலமாக இலங்கையில் வசித்து வந்துள்ளார்.
காய்ச்சலினால் கடந்த 15ஆம் திகதி, நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், சீனாவில் வசிக்கும் அவரது தாயார் ஆகியோருக்கு தகவல் வழங்கியுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.