சென்ஜோன்டிலரி மேற்பிரிவு மற்றும் கியூ பிரதேச மக்கள் நோர்வூட் நகரத்திற்கு செல்லும் இப்பிரதான பாதை மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டதுடன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சுப்பதவிகளை வகித்தவர்களும், அரசியல்வாதிகளும் இப்பாதை தொடர்பாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வில்லை.அத்தோடு தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரசாரங்களை செய்தனர். மக்கள் பல்வேறு விசனங்களை தெரிவித்தனர்.
இப்பாதையினை அபிவிருத்தி செய்து தருமாறு நோர்வூட் பிரதேச சபை தலைவர் என்றவகையில் என்னிடம்,இவ்வட்டார நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் திரு.அலெக்சாண்டர் அவர்களூடாக மக்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.
இவ்விடயம் தொடர்பாக மறைந்த இந்திய வம்சாவழி மக்களின் தார்மீக தலைவர் அமரர்.கெளரவ.ஆறுமுகன் தொண்டமான் அவர்கள், கெளரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தபோது நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க 100,000KM காபர்ட் பாதை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளெடுக்குமாறு பணித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
அந்தவகையில் பிரதேச சபை தலைவர் என்றவகையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 km காபர்ட் பாதையில் இப் பிரதான பாதையின் அபிவிருத்தி தொடர்பாக முன்மொழிவினை முன்வைத்தேன். இதற்கமைய ஒன்பது கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கொரனா தொற்றின் அதிக பரவல் காரணமாக தாமதத்தினை அடுத்து இப் பாதையின் அவசியத்தை கருத்திற்கொண்டு
கெளரவ இராஜாங்க அமைச்சர் ஜவன் தொண்டமான் அவர்களின்,பல்வேறு அழுத்தங்கள் காரணமாக விரைவாக நிறைவு பெற்றுள்ளது.
இவ்வேலைத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஷ்வரன் அவர்களுக்கும், முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினரும், இ.தொ.காவின் உபத்தலைவருமாகிய கணபதி கனகராஜ் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, வெகு விரைவில் மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக இப்பாதை கையளிக்கப்படும் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.