‘76,000 பைசர் தடுப்பூசிகள் வந்தன – நாளை 10 லட்சம் சினோ பாம் வருகின்றன’

76 ஆயிரம் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் இன்று (23) நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பெல்ஜியத்திலிருந்து இவை கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 27 ஆம் திகதி மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக தினுஷ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles