” நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தற்போது பயனற்று போயுள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவர் வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
“ இன்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கடைகள் திறக்கப்படுகின்றன. ஆட்டோக்கள் வீதியில் உள்ளன. தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையை குறைப்பதே பொது முடக்கத்தின் பிரதான நோக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. வைத்தியசாலைகளின் நிலைமை அவ்வாறே உள்ளது.
எனவே, ஊரடங்கு உத்தரவு முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.” – என்றும் அவர் வலியுறுத்தினார்.










