நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்துவதாக இருந்தால் – அதன் பின்னர் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் விரிவானதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.
கொவிட் – 19 ஒழிப்பு செயலணிக்கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்படி கோரிக்கையை, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விடுத்தார் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. போயா தினத்தில் மாத்திரமே மேற்படி நிலையங்கள் மூடப்படும்.