-இ.தொ.காஇ ரூபன் பெருமாள் நடவடிக்கை-
இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் பனில்கந்த தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்தினால் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
இந்தக் காணிகளை தமக்கு பெற்று தரும்படி தோட்ட மக்கள் முன்வைத்த கோரிக்கையை அடுத்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த தோட்டத்தின் காணிகளை அண்மித்து வாழும் கிராமங்களை சேர்ந்த பெரும்பான்மை மக்கள் கைப்பற்றி வந்த சூழ்நிலையில் ஆண்டாண்டு காலமாக குறித்த தோட்டத்தில் தோட்டத்தின் வளர்ச்சிக்காக தோட்ட மக்கள் பாடுபட்டு வந்துள்ளனர்.
இந்த மக்கள் காணி உரிமைக்காக தான் எம்பிலிப்பிட்டிய காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரஞ்சன் வீரசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் ரூபன் பெருமாள் மேலும் தெரிவித்துள்ளார்.
தோட்ட லயன் குடியிருப்புகளுக்கு அண்மையில் காணப்படும் அரை ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரையான நிலப்பரப்புகளைக் கொண்ட காணிகளை சுமார் 15 குடும்பங்களை சேர்ந்த தோட்ட மக்கள் தொடர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கான காணி உரிமையை சட்ட ரீதியாக பெற்றுக் கொடுத்துஇ அவர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக உருமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பிரதேசத்திலிருக்கும் பெரும்பான்மை அரசியல் வாதிகளின் தலையீட்டினால், குறித்த தோட்ட காணிகளை பெரும்பான்மை மக்கள் கைப்பற்ற முயற்சி செய்து வந்த சூழ்நிலையில்இ கைவிடப்பட்ட காணிகளில் பெருந்தோட்ட இளைஞர்கள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்தபோது தோட்ட நிர்வாகம் அதனை எதிர்த்து செயற்பட்டதை தொடர்ந்து தோட்ட இளைஞர்கள் இந்த விடயத்தை தனது கவனத்திற்குக் கொண்டுவந்ததாக ரூபன் பெருமாள் தெரிவித்தார்.
இதனையடுத்து தான் இந்த விடயம் குறித்து தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், இந்த விடயம் குறித்து செந்தில் தொண்டமான்இ காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவரின் நேரடி கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார் என்றும் ரூபன் பெருமாள் மேலும் தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் தொடர்ச்சியாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட குடும்பங்களுக்கு அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த 1ஃ2 ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் அளவிலான காணிகளையும்இ அதேவேளை காணி உரிமம் கோரும் தோட்ட இளைஞர்களுக்கு தலா 20 பேர்ச்சஸ் அளவிலான காணிகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ரூபன் பெருமாள் மேலும் தெரிவித்துள்ளார்.