‘லொஹான் ரத்வத்த கைது’ – சி.ஐ.டியில் முறைப்பாடு

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் செயற்பட்ட-  லொஹான் ரத்வத்தவை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தி முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினராலேயே, மேற்படி முறைப்பாடு குற்ற புலனாய்வுப் பிரிவில்  இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த லொஹான் ரத்வத்தவை  கைது செய்து , சம்பவம் தொடர்பில் முழுமையாக விசாரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Related Articles

Latest Articles