” கொரோனா விவகாரத்தை பயன்படுத்தி தற்போதைய அரசாங்கம் அரசியல் நடத்திவருகின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்களின் கோரிக்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பபட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெறும் சாத்தியம் உள்ளது. எனவே, மீண்டும் ஒரு கொத்தணி உருவாகாமல் இருப்பது தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற அமர்வை நான்கு நாட்களுக்கு நடத்துமாறு வலியுறுத்தினோம். எனினும், இரு நாட்கள் மட்டுமே நடத்தப்படுகின்றது. ஆனால் பார்கள் எல்லா நாட்களிலும் திறக்கப்பட்டுள்ளன என ரஞ்சித் மத்தும பண்டார